Breaking News

சீரற்ற வானிலையால் இதுவரை 1444 குடும்பங்கள் பாதிப்பு!

 


நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களில் 41 பிரதேச செயலகங்க பிரிவுகளில் பாதிப்பு இடம்பெற்றுள்ளது.

1444 குடும்பங்களைச் சேர்ந்த 5790 பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த அனர்த்தத்தினால் 4 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் இருவர் வெள்ளத்தில் சிக்கியும் இருவர் மின்னல் தாக்கலுக்குள்ளாகியும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 03 வீடுகள் முழுமையாகவும், 409 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் சில தினங்களில் காலநிலையில் சிறிதளவு மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.