Breaking News

அதிகரிக்கப்பட்டது மரக்கறிகளின் விலை..



நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் ஒரு கிலோவின் விலை 200 முதல் 300 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், விசேட பொருளாதார மையங்களிலும் கொழும்பு மரக்கறி சந்தையிலும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மரக்கறிகளின் சில்லறை விலைகளும் அதிகரித்துள்ளதாக, நாடு முழுவதும் சில்லறை மரக்கறி வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.