Breaking News

தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த விஜய்!

 


விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்களின் இந்த வெற்றி அரசியல் வட்டத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் தேர்தலில் தன் படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்று விஜய் கண்டிப்பாகக் கூறி, தடை போட்டிருந்தார். 

ஆனாலும் சோர்வடையாத விஜய் ரசிகர்கள் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். இளம் தலைமுறையினரை ஊக்குவிக்க வேண்டும் என்று மக்கள் நினைத்தார்களோ என்னவோ தேர்தலில் நின்ற பல நிர்வாகிகள் அதிக ஓட்டு வித்தியாசத்தில்  வெற்றி பெற்றனர். 

இந்தச் செய்தி விஜய் எட்டியவுடன் மகிழ்ச்சியுடன் புன்னகைத்து அவர்களின் வெற்றி விபரங்களைக் கண்காணித்துச் சொல்லக் கட்டளையிட்டார். வாக்கு எண்ணிக்கை நடந்த நாளில் விஜய்யின் அலுவலகம் பரபரப்பானது. தொடர்ந்து வந்த தேர்தல் நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து இறுதியாக 110  பேர் வெற்றி பெற்ற விபரம் வந்தவுடன் மக்கள் மன்றத்து ஆட்கள் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

இந்நிலையில் தேர்தல் நடந்து முடிந்த பல நாட்களுக்குப் பிறகு வெற்றி பெற்ற மக்கள் மன்ற நிர்வாகிகளை நேற்று அழைத்துப் பாராட்டியிருக்கிறார். வெற்றி பெற்ற குழுவினரோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டிருக்கிறார் விஜய்.