மீண்டும் அம்மாவாகும் விஜய் TV நடிகை!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா – சஞ்சீவ் ஜோடி. பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தங்கள் திருமணம் குறித்து ஆல்யாவின் பிறந்த நாளில் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
இவர்களுக்கு அய்லா என்ற பெண் குழந்தை உள்ளது. ஆல்யா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி தொடரின் 2 ஆம் பாகத்திலும், சஞ்சீவ சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரிலும் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் ரசிகர்களுக்கு பதிலளித்தார். அப்போது ஆல்யா கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இதனையடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆல்யா கர்ப்பமாக இருப்பதால் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.