நாட்டில் தொடருமா ஊரடங்கு? - நாளை தீர்மானம்!
நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா என்பது குறித்த தீர்மானம் நாளையதினம் (வெள்ளிக்கிழமை) எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா ஒழிப்பு செயலணியின் வாராந்த மீளாய்வுக்கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.
இதன்போதே நாட்டின் தற்போதைய நிலைமை மீளாய்வு செய்யப்பட்டு, தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் கடும் சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படலாம் எனவும், மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.