Win-ஆ, வீட்டுக்கா? - அர்ச்சனாவை திணற வைத்த ஆஜித்தின் கேள்வி!
பிக் பாஸ் 4ல் தற்போது முக்கிய போட்டியாளராக இருக்கிறார் அர்ச்சனா. அவர் தனக்கென ஒரு குரூப்பை சேர்த்து வைத்துக் கொண்டு விளையாடி கொண்டு இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது வைக்கப்பட்டு உள்ளது. அவரும் தனது கேங்கில் 6 பேர் இருப்பதை ஓப்பனாக கூறி வருகின்றார்.
ஆனால் கமல் குரூப்பிஸம் பற்றிய கேள்விகளை எப்போது கேட்டாலும் தான் அப்படி செய்வதே இல்லை என கூறி சமாளித்து வருகிறார்.
இந்நிலையில் இன்றைய கால் சென்டர் டாஸ்கில் ஆஜித் அவருக்கு போன் செய்து பேசி இருக்கிறார். அது தற்போது வெளிவந்திருக்கும் மூன்றாவது ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
"நீங்க உள்ளே வரும் போது ஒரு strong contestant என எல்லோரும் நினைத்தார்கள். கமல் ஷோவில் 'நான் இன்னும் என் நக்கலை காட்டவில்லை' என சொல்லி இருந்தீர்கள். ஆரம்பத்தில் நக்கலாக பேசிய நீங்கள் அதன் பின் அது குறைந்துவிட்டது."
"அடிக்கடி வீட்டுக்கு போகவேண்டும் என சொல்கிறீர்கள். ஆனால் டாஸ்கில் வேற லெவலில் perform செய்கிறார்கள். இப்போது வீட்டுக்கு போகணுமா இல்லை ஜெயிக்கணுமா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படி ஒரு கேள்வியை ஆஜித் கேட்பார் என அர்ச்சனா நிச்சயம் எதிர்பார்த்து இருக்கமாட்டார். இன்றைய எபிசோடு ஒளிபரப்பானால் தான் அர்ச்சனா என்ன பதில் சொல்வார் என்பது தெரியவரும்.
#Day58 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/dcdNro3fTZ
— Vijay Television (@vijaytelevision) December 1, 2020