பாலாஜி குறித்த சுசியின் சர்ச்சை பதிவு: நெட்டிசன்கள் கேள்வி!
பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே அனைத்து போட்டியாளர்களுடன் விடிய விடிய அவர்கள் குறித்து மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
அதன் பின்னர் அவர் பெரும்பாலான டாஸ்குகளில் ஆர்வமாக கலந்து கொள்ளவில்லை. பாலாஜியுடன் மட்டுமே எப்போதும் ஒட்டிக்கொண்டு ஷிவானிக்கு கடுப்பு ஏற்றியதை தவிர சுசித்ரா எதையும் உருப்படியாக செய்யவில்லை என்பதே பார்வையாளர்களின் விமர்சனமாக இருந்தது. இதனால் இரண்டே வாரத்தில் அவர் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கத.ு
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் பாலாஜி குறித்து அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை செய்து வருகிறார் சுசி. அந்த வகையில் சமீபத்தில் அவர் செய்த ஒரு பதிவில் பாலாஜியின் புகைப்படத்தை பதிவு செய்து ’எங்கள் ஜாதியே வேற’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் பாலாஜி குறித்து கூறுவதற்கு ஜாதி என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்றும், அதற்கு பதிலாக வேறு வார்த்தையை சொல்லி இருக்கலாமே என கூறிய போது அதற்கு பதிலளித்த சுசி, ‘ஜாதியை எப்படி சார் மாற்ற முடியும்? அது ஏதோ ஒரு பொறாமை பிடித்தவர்கள் செய்து கணக்கு, அதை தப்பாக நினைக்க வேண்டாம். நான் குறிப்பிட்டதை வேறு அர்த்தத்தில் பாருங்கள். நான் எப்போதும் திராவிட ஜாதி என்பதை பெருமையாக சொல்வேன்’ என்று கூறியிருந்தார்.
மேலும் ‘நான் யானை ஜாதி என்று பெருமையாக சொல்லி கொள்வேன் என்றும், ஏனெனில் அதுவும் உண்மை’ என்றும் பதிவு செய்துள்ளார். பாலாஜி குறித்து சுசி பதிவு செய்த இந்த சர்ச்சை பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிறிது நேரத்தில் அவர் கமெண்ட் பகுதியை ஆஃப் செய்துவிட்டு தனது ஜாதி குறித்த சர்ச்சை பதிவில் எடிட்டும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.