Breaking News

செருப்பால் அடித்துக் கொண்ட பாலாஜி! சனம் ஷெட்டியுடன் மிக மோசமான சண்டை!


பிக் பாஸ் நான்காவது சீசன் தற்போது 60 வது நாளை தொட்டிருக்கிறது. வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் இடையே அதிக பிரச்சனைகள் வருவதற்கு காரணம் குரூப்பிஸம் என்று தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்தது தான். அப்படி இருப்பதால் பிக் பாஸ் அளிக்கும் டாஸ்குகளில் பல போட்டியாளர்கள் தங்களது கேங்கில் இருக்கும் நபர்களுக்கு ஆதரவாக செயல்படுவது நடக்கிறது. இதனால் சுவாரஸ்யம் குறைவாகவே தெரிகிறது. 

இந்நிலையில் இந்த கால் சென்டர் டாஸ்கில் சிறப்பாக பேசிய போட்டியாளர்கள் மற்றும் தங்கள் முழு முயற்சியையும் வெளிக்காட்டாமல் இந்த டாஸ்கை மேற்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் ஒன்றில் இருந்து 13 வரை வரிசைப்படுத்த வேண்டும் என்கிற டாஸ்க் வழங்கப்பட்டது.  

பிக் பாஸ் அந்த ரேங்க் வரிசையை அவர்களே பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து போட்டியாளர்கள் அனைவரும் அவர்கள் கருத்தை தெரிவித்து முடிவெடுக்கும் பொழுது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

இப்படியாக வாக்குவாதம் ஆரம்பத்ததிலிருந்தே யாரும் விட்டுக்கொடுக்காமல் அவர்கள் இடத்தை முடிவு செய்து கொண்டு விவாதம் செய்து கொண்டிருக்கும் பொழுதே பாலாஜி, சனம் இடையே மோதல் ஆரம்பித்தது.  

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே சனம் ஷெட்டி-பாலாஜி இடையே சண்டைகள் நடந்தும் Tom and Jerry ஐ போல் அடிக்கடி வம்பிழுப்பதுமாக இருந்து வந்தனர்.  

இந்நிலையில் இந்த வரிசைப்படுத்தும் டாஸ்க்கில் சனம் எனக்கு முதலிடம் தான் வேண்டும் என அடம்பிடித்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்த பாலாஜி கால் சென்டர் டாஸ்க்கில் கிடைத்த ஒரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தாமல் failure ஆன உனக்கு எதுக்கு முதலிடம் 13 வது இடத்துக்கு போய் நில் என கடுப்பாகி கத்திக் கொண்டிருந்தார்.   

அதற்கு சனம் எனக்கு கால் செய்து பேசுவதற்கு உங்களுக்கு பயம் என பாலாஜியை மேலும் கடுப்பேத்தினார். அதைக் கேட்ட மற்ற போட்டியாளர்களுமே கோவமடைந்ததாகவே தெரிந்தது.  

ஆனால் பாலாஜி சனமிற்கு முதலிடத்தை கொடுக்க ஒப்புக்கொள்ளாமல் அவருடன் வாக்குவாதம் செய்யும் பொழுது, கையை நீட்டி பேசாதீங்க என சனம் கூற, எனக்கு தேவை தான் என சொல்லி தன் செருப்பால் அடித்துக்கொண்டார் பாலாஜி.  

அதைப் பார்த்த ரசிகர்கள் “என்னயா பாலாஜி பொசுக்குன்னு செருப்பால அடிச்சுக்கிட்ட” என ஆச்சர்யத்துடன் கேட்டனர். இந்த செருப்பு பிரச்சினை இன்னும் எவ்வளவு மோசமான சண்டையாக வெடிக்கப் போகுதோ? என்றே தோன்றியது.  

ஆனாலும் அவர்களிடையே சண்டை ஓய்ந்ததாகவே இல்லை. சனம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்ல, வழக்கம் போல் பாலாஜி திமிராக நான் எதுக்கு மன்னிப்பு கேட்கனும் என பதிலளித்துவிட்டார்.  

இவர்கள் இப்படி டாஸ்க்கில் எதிரும் புதிருமாக பேசுவதும், மோசமாக மோதி சண்டை போட்டுக் கொண்டாலும் பின்னர் மற்ற போட்டியாளர்களை பற்றி இருவரும் ஒரே டீமாக சேர்ந்துக் கொண்டு விமர்சிப்பது என வழக்கமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.