Breaking News

சனம் ஷெட்டிக்கு குவியும் ஆதரவு: ஆனாலும் விதி விளையாடிருச்சே!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒருவர் வெளியேற வேண்டும் என்ற நிலையில் நேற்று ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். இதனை அடுத்து இன்றைய முதல் புரமோவில் சனம், அனிதா மற்றும் ஷிவானி ஆகிய மூவர்தான் டேஞ்சர்ஜோனில் உள்ளனர். 

இவர்கள் மூவரில் யார் தங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களின் விருப்பத்தை கேட்கிறார். 

அப்போது சனம் ஷெட்டிக்கு ஆதரவு குவிந்து வருகிறது. சனம்ஷெட்டி தங்க வேண்டுமென விரும்புவதாக ரியோ, அர்ச்சனா,நிஷா, ஆரி,ரம்யா, ஆகியோர் தெரிவித்தனர். இதில் வித்தியாசமாக அனிதா வெளியே போக வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று ஆரி கூறினார். 

அப்போது குறுக்கிட்ட கமல் ’யார் தங்க வேண்டும் என்றுதான் நான் கேள்வி கேட்டேன்’ என்று கூற அதனை அடுத்து அவர் ’சனம்’ என்று கூறினார் அதேபோல் அனிதா தங்க வேண்டும் என ஆஜித்தும், ஷிவானி தங்க வேண்டும் என சோம் மற்றும் பாலாஜியும் தெரிவித்தனர். 

மொத்தத்தில் சனம்ஷெட்டிக்கு ஹவுஸ்மேட்ஸ்களின் ஆதரவு குவிந்து இருந்தாலும் அவர் தான் இந்த வாரம் வெளியேறி இருப்பதாகவும் விதி வேறு விதமாக விளையாடியிருப்பதாகவும் தகவல்கள் கசிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது