Breaking News

பாலாஜிக்கு எதிராக களமிறங்கிய ஜித்தன் ரமேஷ்! வெடித்த புதிய பிரச்சனை


பிக் பாஸ் 4ல் கடந்த வாரம் கால் சென்டர் டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் சில போட்டியாளர்கள் ஒழுங்காக விளையாடாமல் மற்றவர்கள் நாமினேட் ஆக கூடாது என்பதற்காக விட்டுக்கொடுத்து போன் காலை கட் செய்தனர். இதனால் இந்த கால் சென்டர் டாஸ்க் போர் அடித்தது என ரசிகர்கள் விமர்சித்தனர். 

இந்நிலையில் இந்த டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டவர்கள் மற்றும் சொதப்பியவர்களை வரிசைப்படுத்தி ஒன்று முதல் 13 வரை ரேங்க் அளிக்கவேண்டும் என புதிய அறிவிப்பை பிக் பாஸ் வெளியிட்டார். அதற்காக போட்டியாளர்கள் நிச்சயம் சண்டை போடுவார்கள் என எதிர்பார்த்தது போலவே தான் நடந்தது.  

சனம் ஷெட்டி மற்றும் ஜித்தன் ரமேஷ் நேற்று சண்டை போட்ட நிலையில், இன்றைய ப்ரொமோ வீடியோவில் பாலாஜி முருகதாஸ் மற்றும் ஜித்தன் ரமேஷ் இருவரும் வாக்குவாதம் செய்வது காட்டப்பட்டு உள்ளது.  

'கேட்ட கேள்விக்கெல்லாம் எதற்கு ஒரு மணி நேரம் பதில் சொல்லிட்டு, நான் போனை வைத்துவிட்டு போயிருப்பேனே' என கூறும் பாலாஜி ஆரி உடன் நடந்த தனது உரையாடல் பற்றி பேசி இருக்கிறார். மேலும் மற்ற போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்து காப்பாற்ற போன் வைத்தவர்கள் டாப் 6ல் வரக்கூடாது என்றும் அவர் பேசி இருக்கிறார்.  

அதன் பின் பேசத்தொடங்கிய ஜித்தன் ரமேஷ் 'நீ பாட்டுக்கு போன் பேசிட்டு வெச்சிட்ட, அவர் (ஆரி) இரவு முழுவதும் தூங்கினாரா என்று கூட தெரியாது" என ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.