Breaking News

நிஷாவை பற்று டிஸ்கஸ் செய்யும் அர்ச்சனா-ரமேஷ்: உடைகிறதா லவ்-பெட் குரூப்?


பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வரும் வரை நிஷா தன்னுடைய தனித்திறமையை காண்பித்து விளையாடி கொண்டிருந்த நிலையில் அர்ச்சனா வந்த சில நாட்களிலேயே அவர் டம்மியாக்கப்பட்டு அன்பு குரூப்பால் ஆஃப் செய்யப்பட்டார். அதன்பின்னர் நிஷாவின் காமெடிகளும் விளையாட்டும் பெரியதாக ரசிக்கப்படவில்லை. இதனை பாலாஜி, அனிதா, சனம் உள்ளிட்டோர் நேரடியாகவே பலமுறை கூறிவிட்டனர். 

இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் அர்ச்சனா, ரமேஷ், சோம் மற்றும் ரியோ ஆகியோர் நிஷாவை குறித்து பேசுகின்றனர். இதில் நிஷா மொக்கை காமெடி செய்து வருவதாகவும், தானே தன்னை தாழ்த்தி கொள்வதாகவும் பேசி வருகின்றனர். மேலும் "ஒரு முறை, இருமுறை என்றால் பரவாயில்லை, மூன்றாவது முறை அவராகவே புரிந்து நடந்து கொள்ள வேண்டாமா, எப்போது தான் அவருக்கு தெரிய வரும்" என ஜித்தன் ரமேஷ் கூறுகின்றார்.  

இதில் அர்ச்சனா, அவர் சொல்ற நகைச்சுவை நன்றாக இருந்தால் கேளுங்கள், இல்லையென்றால் போய்விடுங்கள், நகைச்சுவை நன்றாக இல்லை என்று சொன்னால் அவருடைய அடுத்த ஐந்தாறு வருட கேரியர் பாதிக்கும் என்று கூறுகின்றார். இந்த உரையாடலை ரியோ, சோம் அமைதியாக பார்த்து கொண்டிருக்கின்றார்கள்.  

இன்னொரு பக்கத்தில் நிஷாவுக்கு வழக்கம்போல் ஆரி தனது அறிவுரைகளை வழங்கி வருகிறார். மொத்தத்தில் அர்ச்சனாவின் ல்வ்-பெட் குரூப் நிஷாவால் உடையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.