கர்ப்பத்தின்போது தலைகீழ் யோகாசனம்: பிரபல நடிகையின் வைரல் புகைப்படம்!
பிரபல பாலிவுட் நடிகையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் அவருக்கு இன்னும் ஒருசில தினங்களில் குழந்தை பிறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அனுஷ்காவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக அவர் யோகாசனம் செய்ததாகவும் அப்போது அவரது கால்கலை விராட் கோலி பிடித்து இருப்பது போன்ற ஒரு புகைப்படம் பதிவாகி உள்ளது. ஆனால் இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்றும் சில மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்பதை குறிக்கும் வகையில் த்ரோபேக் என்ற ஹேஷ்டேக்கை அனுஷ்கா சர்மா பயன்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த யோகாசனத்தை மருத்துவரின் அறிவுரைப்படி தான் செய்ததாகவும் அருகில் யோகாசன ஆசிரியர் இருந்ததாகவும் அவருடைய வழிகாட்டுதலின்படி இந்த யோகாசனத்தை செய்ததாகவும் அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.
கர்ப்பமான நிலையில் தலைகீழாக யோகாசனம் செய்யும் அனுஷ்கா சர்மாவின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.