GCE O/L பரீட்சை எப்போது? கல்வியமைச்சரின் அறிவிப்பு
கொவிட்-19 பரவல் காரணமாக பிற்போடப்பட்ட கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப்பரீட்சையை 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன் குறித்த ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்த கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பரீட்சையை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது என்று கூறினார்.
அவ்வாறு மார்ச் மாதம் பரீட்சை நடாத்தப்பட்டால் மிக விரைவில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கும் எதிர்பார்ப்படுகின்றது.
மாணவர்களின் நிலை குறித்து அவதானம் செலுத்தியதன் பின்னரே இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
2021ம் ஆண்டு ஜனவரியில் இந்த பரீட்சைகளை நடத்த முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் அதற்கான சூழ்நிலைகள் இல்லை என கல்வி அமைச்சரால் முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது மார்ச் மாதத்தில் பரீட்சைகளை நடத்துவதுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் இந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.