Breaking News

சித்ரா மரணத்தில் தொடர்புள்ள மூன்றாவது நபர்? வரிசை கட்டி நிற்கும் குழப்பங்கள்!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் VJ சித்ரா. இந்தத் தொடரில் சித்ரா, முல்லை என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். இதனால் சித்ராவிற்காகவே சிலர், இந்த தொடரை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். 

மேலும் படிப்படியாக முன்னேறி உச்சத்தைத் தொட்ட சித்ரா, கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டு, அவரது ரசிகர்களையும் திரை உலகையும் சோகக் கடலில் மூழ்கடித்தார்.  

ஏற்கனவே இவரது மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது புது புதிதாக பல வில்லங்கமான விஷயங்கள் அம்பலமாகி கொண்டிருக்கின்றன. அதாவது சித்ரா டிசம்பர் 8 தேதி இரவு ஷூட்டிங்கை முடித்துவிட்டு, தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்தார். அங்கு தான், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  

மேலும் நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வாடகை வசூலிக்கப்படும் அந்த ஹோட்டலில், வீடுகள் போல் தனித்தனியாக அமைந்திருக்கும் ஒவ்வொரு ரூமிலும் என்ன நடந்தாலும் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர் காவல் துறையினர். அதுமட்டுமில்லாமல், 2. 45 மணிக்கு இறந்த சித்ராவை பற்றி விசாரிக்க போலீஸார் 45 நிமிடங்கள் கழித்து தான் அந்த ஹோட்டலுக்கு வந்தார்களாம்.  

மேலும் சித்ரா, அந்த ஹோட்டல்க்கு எத்தனை மணிக்கு வந்தார் என்பதற்கும், ஹேமந்த்நாத் எத்தனை மணிக்கு ஹோட்டல் அறையை விட்டு வெளியே சென்றார், எவ்வளவு நேரம் வெளியே நின்றார் என்பது பற்றியும் எந்த ஒரு பதிவும் இல்லை. அத்தோடு, சித்ரா தூக்கில் தொங்கிய படி, ஹேமந்த்தும் அந்த ஹோட்டலின் மேனேஜர் மட்டும் தான் பார்த்தார்களாம். காவல்துறையினர் வருவதற்கு முன்பு ஹேமந்த்தும் மேனேஜரும் அவசர அவசரமாக எதற்காக சித்ராவை தூக்கில் இருந்து அப்புறப்படுத்தினர் என்பது பற்றி இன்று வரை தெரியவில்லை.  

அதுமட்டுமில்லாமல், போலீஸார் விசாரணையின் போது ஹேமந்த் தெளிவான பதில் எதையும் கொடுக்கவில்லை என்கின்றனர் காவல்துறையினர். ஏனென்றால் முதலில் சித்ரா குளிக்க சென்றதால் நான் வெளியே சென்றேன் என்று கூறிய ஹேமந்த் பிறகு, ஒரு டாக்குமென்ட் எடுப்பதற்காக வெளியே சென்றேன் என்று கூறியிருப்பது வினோதமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆக மொத்தம் சித்ராவை எதற்காக ஹேமந்த், ரூமில் விட்டுவிட்டு வெளியே சென்றார் என்பது இன்று வரை தெரியவில்லை.  

மேலும் ஹேமந்த் வெளியே சென்றிருந்த போது, வேறு யாராவது ஒருவர் சித்ராவை கொலை செய்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அந்த நபர் சித்ராவிற்கு மிகவும் தெரிந்த நண்பராகவோ, அரசியல் புள்ளிகளில் யாராவதாகவோ இருக்கலாம் என்று பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

எனவே, இந்த தகவல் மூலம் சித்ராவின் கொலை வழக்கில் மூன்றாவது நபர் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.