கால்சென்டர் டாஸ்க்கில் பெஸ்ட் யார்? முதலிடத்தை பிடிக்க போட்டா போட்டி!
பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக கால்சென்டர் நடைபெற்று வந்தது என்பதும் இதில் காலர்கல், கால் சென்டர் ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த கால் சென்டர் டாஸ்க்கில் சில மென்மையான உரையாடல்களும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்த டாஸ்க் முடிவடைந்த நிலையில் கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக விளையாடியவர்கள் யார் யார் என்பதை 1 முதல் 13 வரை வரிசைப்படுத்த வேண்டும் என பிக்பாஸ் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தான் சிறப்பாக பேசியதாக வாக்குவாதம் செய்து வருகின்றனர். குறிப்பாக முதல் இடத்தைப் பிடிப்பதற்கு ஆரி, அர்ச்சனா, சோம், ஆகியோர் போட்டா போட்டி போட்டு ஒருவருக்கொருவர் முந்தி கொண்டு முதலிடத்தை பிடிக்க முயற்சிப்பதால் போட்டியாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இரண்டாம் இடத்தை அனிதாவும், மூன்றாவது இடத்தை பாலாஜியும் பிடித்து கொண்டது போல் புரமோவில் தெரிய வந்தாலும், இந்த டாஸ்க்கில் முதலிடத்தை பிடித்தவர் யார்? கடைசி இடத்தைப் பிடித்தவர் யார் என்பதை இன்றைய நிகழ்ச்சிகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.
#Day59 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/gkuUDMz5FQ
— Vijay Television (@vijaytelevision) December 2, 2020