பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரி? பிரபல விஜே மறைமுக தகவல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 13 பேர் இருந்து வரும் நிலையில் இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்கார்ட் எண்ட்ரியாக ஏற்கனவே சீரியல் நடிகர் அஜீம் உள்ளே வரப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அவரது தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது வருகை தாமதம் ஆவதாக தெரிகிறது.
இருப்பினும் இன்னும் 40 நாட்கள் மட்டுமே நிகழ்ச்சி இருக்கும் நிலையில் வைல்ட்கார்ட் எண்ட்ரிக்கு வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் தற்போது திடீரென பிரபல விஜே மகேஸ்வரி தனது சமூக வலைதளப் பக்கங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர இருப்பதாக மறைமுகமாக ஒரு பதிவு செய்துள்ளார்.
இன்னும் ஒருசில தினங்களில் ஒரு ஆச்சரியமான அறிவிப்பு வெளிவரும் என்று அவர் குறிப்பிட்டு ஓட்டலில் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அதே ஹோட்டலில் தான் மகேஸ்வரியும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேறும் நிலையில் விஜே மகேஸ்வரி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வருகிறாரா? அல்லது அஜீம் வருகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.