Breaking News

இந்த வாரம் எவிக்சன் செய்யப்படுபவர் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!


பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒருவர் எவிக்சன் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட ஏழு பேர்களில் ஷிவானி குறைவான ஓட்டுக்களை பெற்றுள்ளதாக கூறப்படுவதால் அவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதனால் அவரது ஆர்மியினர் அதிர்ச்சியில் உள்ளனர். 

இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் உள்ள ஆரி, அனிதா, ரம்யா பாண்டியன், சனம்ஷெட்டி, ஆஜித், நிஷா, ஷிவானி ஆகியோர் உள்ளனர். இவர்களில் வாக்குகளின் அடிப்படையில் ஆரி, சனம்ஷெட்டி ஆகிய இருவரும் அதிக வாக்குகள் பெற்றுள்ளதாக தெரிகிறது. அதேபோல் குறைவான வாக்குகளை ஷிவானி பெற்றிருப்பதாகவும் அவரை அடுத்து அஜீத் மற்றும் ரம்யா பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் இந்த வாரம் தற்போதைய நிலவரப்படி ஷிவானி தான் குறைவான வாக்குகள் பெற்று உள்ளதால் அவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் மில்லியன்கணக்கான ஃபாலோயர்கள் இருப்பதால் அவர்கள் இன்று இரவுக்குள் அதிகமாக வாக்களித்தால் ஆஜித் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

ஆஜித், ஷிவானி ஆகிய இருவருமே பிக்பாஸ் வீட்டில் கண்டெண்ட் கொடுக்காத போட்டியாளர்களாக இருப்பதால் இருவரில் யார் வெளியேறினாலும் பிக்பாஸ் விளையாட்டில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றே பார்வையாளர்கள் கருத்து கூறி வருகின்றனர்.