Breaking News

அனிதா கேட்ட கேள்விகளால் திணறிய ரியோ!

கடந்த வாரம் நடந்த கால் சென்டர் டாஸ்க் தான் இந்த வாரமும் பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பிட்ட சில போட்டியாளர்கள் பேசும் கால் மட்டும் அதிக சுவாரஸ்யத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. நேற்று பாலாஜி - ஆரி போன் கால் அதிகம் பேசப்பட்ட ஒன்றாக மாறி இருக்கிறது. 

இந்நிலையில் தான் ஆரிக்கு இன்று அனிதா சம்பத் போன் செய்து பேசி இருக்கிறார். நீங்கள் individual player ஆக விளையாடுறீங்களா என அனிதா கேட்க, நான் தனியாக தான் விளையாடுகிறேன் என ரியோ பதில் கூறுகிறார். ஆனால் அப்படி தெரியவில்லை என அனிதா அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.  

மேலும் வெளியில் போடாத ஒரு முகமூடியை இங்கு போட்டு வந்திருக்கீங்க என குற்றம்ச்சாட்டி இருக்கும் அனிதா, 'நான் பாதி முகத்தை தான் காட்டுவேன், நீ எனக்கு trophy கொடு என சொன்னால் மக்கள் எப்படி கொடுப்பாங்க என நீஎங்கள் நினைக்கறீங்க" என ரியோவிடம் கேட்டிருக்கிறார்.  

மேலும் Criticism சொல்ல யாரவது எழுந்தாலே அவரை உட்காரவைத்து விடுகிறீர்கள் என அனிதா புகார் சொல்ல, நான் அப்படி இல்லை என ரியோ விளக்கம் கொடுக்கிறார். மற்றொரு கேள்விக்கு ரியோ பதில் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் அனிதா இடையில் 'நான் கேட்கும் கேள்வியை புரிந்துகொண்டு நீங்கள் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்' என நினைப்பதாகவும் கூறி அவரை நக்கல் செய்தார்.  

டாஸ்க் முடிந்து வெளியில் வந்த பிறகு அனிதாவிடம் 'Good call' என கூறி ரியோ பாராட்டுகிறார். ஆனால் உள்ளே சென்று சோம் உள்ளிட்டவர்களிடம் 'இது டாஸ்க் என்பதால் control ஆக இருந்தேன்' என தெரிவித்து இருக்கிறார்.  

இந்த ப்ரோமோ வீடியோ இதோ..