Breaking News

ஆரியை விளாசிய அனிதா.. நீங்க ஏன் சனம் ஷெட்டிக்கு Favorism காட்டுனீங்க?

கடந்த வாரம் தொடங்கிய கால் சென்டர் டாஸ்க் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரமும் தொடர்ந்து நடைபெற்றது. ஒருவழியாக அது நிறைவடைந்த நிலையில், அதில் போட்டியாளர்களின் performance அடிப்படையில் ஒன்று முதல் பதிமூன்று வரை ரேங்க் வழங்கவேண்டும் என நேற்று முன்தினம் பிக் பாஸ் கூறினார். 

அதற்காக போட்டியாளர்கள் விவாதம் நடத்திக்கொண்டு இருந்த நேரத்தில் அதிகம் பிரச்சனைகளும் வெடித்தது. முதலிடம் யாருக்கு என முதலில் பஞ்சாயத்து நடந்தது. அதில் இறுதியில் ஆரிக்கு மெஜாரிட்டி அடிப்படையில் முதலிடம் வழங்கப்பட்டது. அதன் பின் இரண்டாம் இடம் யாருக்கு என சண்டை தொடங்கியது.  

அனிதா 2ம் இடத்தில் நின்றுகொண்டிருந்த. அப்போது சனம் ஷெட்டிக்கு இரண்டாம் இடம் வழங்கலாம் என ஆரி பரிந்துரைத்தார். அவருக்கு 5 பேர் வாக்குகளும் அளித்தனர். அதனால் அனிதாவை வெளியில் அனுப்பிவிட்டு சனம் ஷெட்டியை அங்கே நிற்க வைத்தனர். அதன் பின் அனிதா மூன்றாவது இடத்திற்கு முயற்சித்தார், ஆனால் பாலாஜி முருகதாஸ் அந்த இடத்தை பிடித்துக்கொண்டார். இதனால் விரக்தியில் அனிதா வெளிநடப்பு செய்து விட்டார்.  

இந்நிலையில் ஆரி சனம் ஷெட்டிக்கு பரிந்துரைத்து அவருக்காக வாக்கெடுப்பு நடத்தியது பற்றி அனிதா இன்று சண்டை போட்டிருக்கிறார். அது சற்றுமுன் வெளிவந்த 61ம் நாள் முதல் ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.