Breaking News

உசுர கொடுத்து காதலிச்சான், உடைஞ்ச மனசில அவளை வச்சான்: பாலாஜியின் பர்த்டே பாடல்! (Unseen)


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடைசி வாரம் வரை டைட்டில் வின்னர் சாண்டி தான் என்று பலர் நினைத்து கொண்டிருந்த நிலையில் திடீரென அனைவரையும் அசத்தும் பாடல் ஒன்றை பாடி பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றுவிட்டார் முகின். அந்த பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இந்த சீசனில் ஆஜித் அவ்வப்போது பாடலை பாடி அசத்தி வரும் நிலையில் தற்போது பாலாஜி, முகின் போல் மாறி ஒரு பாடலை பாடுகிறார். இன்று அவருக்கு பிறந்த நாளை முன்னிட்டு பாலாஜியும் ஆஜித்தும் பாடும் இந்த பாடலுக்கு சக போட்டியாளர்கள் தாளம் போட்டு கைதட்டி மகிழ்கின்றனர்.   

அன்சீன் வீடியோவாக சமூக வலைத்தளத்தில் வைரலாகும் இந்த பாடல் இந்த சீசனின் பாடலாக இருக்குமா? மேலும் இந்த பாடலின் வரிகள் மூலம் அவர் போட்டியாளர்களுக்கு குறிப்பாக ஷிவானிக்கு ஏதோ சொல்வது போன்றும் உள்ளது. இந்த பாடல் வரிகள் இதோ:   

உசுர கொடுத்து காதலிச்சான் 
உடைஞ்ச மனசில அவளைை வச்சான் 
உடைஞ்ச மனசு உடைஞ்சு போச்சாம் 
இத யாரு வந்து கேட்பான் மச்சான்  

இந்த சாங்க கேட்ட ஆகலாண்ட நீ Wake up மச்சான் புரிஞ்சிட்டா உனக்கு தாண்டா உன் மச்சான்