கேப்டன்ஷிப் டாஸ்க்: பாலாஜிக்கு ஒரு ஸ்பெஷல் குறும்படம்!
நேற்று நடைபெற்ற கேப்டன்ஷிப் டாஸ்க்கில் பாலாஜி, ரமேஷ் மற்றும் ரம்யா கலந்து கொண்ட நிலையில் இந்த டாஸ்க்கின் முடிவில் பாலாஜிக்கு ஏற்பட்ட அதிருப்தியை கேப்டன் என்ற முறையில் ரியோ விளக்கமளித்தார். ஆரி தன்னுடைய கியூப்களை சரியாக எண்ணவில்லை என்றும் மாற்றி மாற்றி கூறியதாகவும், அதனால் இந்த முடிவில் தனக்கு திருப்தி இல்லை என்றும் கூறினார்.
மேலும் மற்றவர்களின் ஒரு க்யூபை கூட தான் தட்டவில்லை என்றும், குறிப்பாக ரமேஷின் சிகப்பு கியூப்களை தான் தட்டவே இல்லை என்றும் பாலாஜி வாதாடினார். என்னுடைய க்யூபை மட்டுமே நான் தட்டினேன் என்று பாலாஜி தொடர்ந்து கூறியபோதிலும் மற்ற கலர் க்யூபும் விழுந்தது என்று ஆரி, ரியோ உள்பட ஒருசிலர் கூறினர் ஆனால் பாலா அதனை ஏற்று கொள்ளவில்லை.
இந்த நிலையில் போட்டியாளர்கள் தவறு செய்துவிட்டு அதனை மறுக்கும்போது அவ்வபோது குறும்படங்கள் போட்டு கடந்த சீசன்களில் அசத்திய கமல்ஹாசன், இந்த சீசனில் 60 நாட்கள் ஆகியும் ஒரேஒரு குறும்படத்தை மட்டுமே போட்டுள்ளார். ஆனால் கமல்ஹாசன் போட மறந்த குறும்படங்களை ஹாட்ஸ்டார் புண்ணியத்தில் நெட்டிசன்களே டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கேப்டன்ஷிப் டாஸ்க்கிலும் பாலா கூறியது தவறு என்பதை குறிக்கும் வகையில் குறும்படங்களை நெட்டிசன்கள் பதிவு செய்துள்ளனர். பாலா தன்னுடைய பச்சை கியூபை தட்டியபோது ரமேஷின் சிகப்பு க்யூப் விழுந்ததையும் பாலாவின் பச்சை க்யூப் வெளியே விழுந்ததையும் குறும்படத்தில் நெட்டிசன்கள் காண்பித்துள்ளனர். இதில் இருந்தே பாலாஜி பொய் சொல்கிறார் அல்லது மறதியாக தவறாக சொல்கிறார் என்பது உறுதியாகியுள்ளது மொத்தத்தில் ரமேஷ் நிஜமாகவே வெற்றி பெற்றுதா இந்த வாரம் கேப்டனாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Day58 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/Vb0G19ozP8
— Vijay Television (@vijaytelevision) December 1, 2020
#bala kurum padam #BiggBossTamil4 pic.twitter.com/ukRIBDLvaM
— Rio som fan (@gopinath_sankar) December 1, 2020