பாலாஜியின் ஸ்மார்ட் மூவ், ஷாக் ஆன மற்ற போட்டியாளர்கள்!
ஆஜித் - அர்ச்சனா கால்
அர்ச்சனா கால் சென்டர் ஊழியராக இருக்கும் நிலையில் அவருக்கு ஆஜித் கால் செய்து பேசினார். முதல் கேள்வியே அவர் லவ் பெட் பற்றி தான். அந்த கேங்கில் இருப்பவர்களை கடைசியாக எப்போது நாமினேட் செய்தீர்கள்? என கேட்டார். அதற்கு அர்ச்சனா செய்தது இல்லை ஏன் பதில் கூறியதால், அதற்கான காரணத்தை ஆஜித் கேட்டார். கருத்து வேறுபாடு இருந்தால் தான் நாமினேட் செய்ய முடியும் என அர்ச்சனா பதில் கூறினார்.
மேலும் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரையும் நாமினேட் செய்ய வேண்டும் என ஆஜித் கேட்க அர்ச்சனாவும் ஒவ்வொரு பெயராக கூறி நாமினேட் செய்தார். இறுதியில் ஆஜித் நாமினேட் செய்ய காரணம் இல்லை என கூறி அவர் போனை துண்டித்து விட்டார். அதனால் ஆஜித் அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பினார்.
கேபி - சோம் போன் கால்
கேபி கன்பெக்ஷன் ரூமில் இருந்து சோமுக்கு கால் செய்தார். சோம் ஏன் பிக் பாஸ் வந்தார் என்கிற காரணத்தை கேபி முதலில் கேட்டார். பத்து வருடங்களுக்கு முன் தொடங்கிய தன் வரலாற்றை அவர் கூற தொடங்கினார். இந்த வாரம் நாமினேட் ஆன 7 பேரிடம் உள்ள நல்ல விஷயங்கள் பற்றி கூறுங்கள் என கேட்டார். அதன் பின் இறுதியில் கேபியை காப்பாற்ற காலை வேண்டுமென்றே கட் செய்தார் சோம். அதனால் கேப்ரியல்லாவும் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டார்.
ஆரி vs பாலாஜி போன் கால்
அடுத்து ஆரிக்கு பாலாஜி முருகதாஸ் போன் செய்தார். 'நான் உங்களது பெரிய ஃபேன், ஆனால் வீட்டுக்குள் வெளியில்' என பேச தொடங்கி ஆரி மீது தனக்கு இருக்கும் மனஸ்தாபங்கள் அனைத்தை பற்றியும் பேசினார். இடையில் ஆரி அதற்கு பதில் சொல்ல முற்பட்டாலும் பாலாஜி விடவில்லை. இறுதி வரை அவர் ஆரியை பேசவே விடவில்லை. இறுதியில் காலை கட் செய்து விட்டார் பாலாஜி.
ஷிவானியை தங்கச்சி என கூறிய பாலாஜி
ஷிவானியை பாலாஜி தங்கச்சி என கூறியதால் அவர் 'ஏன் அப்படி சொல்றீங்க' என ஷிவானி சண்டை போட்டார். அதை ஆஜித் ஒட்டுக்கேட்டு ரம்யா மற்றும் அனிதாவிடம் கூற அவர்கள் ஒன்றுசேர்ந்து ஷிவானியை கலாய்த்தனர்.
முட்டை உடைக்கும் டாஸ்க்
அதன் பின் போட்டியாளர்கள் தலையில் முட்டை உடைக்கும் டாஸ்க் நடைபெற்றது. அதில் தரையில் முட்டையை வைத்துவிட்டு வரும் அறிவிப்புக்கு தகுந்தாற்போல இருவரும் செய்ய வேண்டும், இறுதியில் முட்டையை எடுக்கும் போட்டியாளர் தான் வெற்றியாளர். அவர் அதனை தோற்கும் நபர் தலையில் போட்டு உடைக்க வேண்டும்.
இந்த டாஸ்க் பார்க்க காமெடியாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.