இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வெளியே போறவங்க இவங்க தான். இணையத்தில் தீயாய் பரவும் ஓட்டிங் லிஸ்ட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தன்னுடைய சுவாரசியத்தை 70 நாட்கள் கடந்தும் ஏகபோகமாக கொண்டிருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மேலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் மக்கள் போடும் ஓட்டுகளின் அடிப்படையில் வெளியேறுவது வழக்கம். ஏற்கனவே ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சனம் ஷெட்டி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா போன்றோர் இதனடிப்படையில் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அர்ச்சனா தான் வெளியேற போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும் மற்ற சமூக ஊடகங்களின் கருத்து படி, சோம் சேகர் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
அதாவது, பிக் பாஸ் 4 வீட்டிற்கு வைல்ட் கார்டு என்ட்ரி ஆக நிகழ்ச்சி தொடங்கிய பத்தாவது நாள் என்ட்ரியானவர்தான் அர்ச்சனா. வந்த முதல் நாளிலிருந்தே தனக்கென ஒரு கூட்டம் வைத்துக்கொண்டு, சேஃப்டி ஆக சுற்றி திரிந்தார் அர்ச்சனா.
இதனால் அர்ச்சனா, பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் பிக்பாஸ் ரசிகர்களிடம் இருந்தும் வெறுப்பை சம்பாதித்து உள்ளார்.
தற்போது அர்ச்சனாவின் ஆதிக்கம் வீட்டிற்குள் சற்று குறைந்து இருப்பதால், பலரும் அவரை நாமினேட் செய்துள்ளனர். இதனால் அர்ச்சனாவை பிக் பாஸ் வீட்டில் இருந்து தூக்கிப்போட எப்படா வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்த பிக்பாஸ் ரசிகர்களுக்கு நல்ல வாய்ப்பு அமைந்துவிட்டது.
அதனடிப்படையில் இணையத்தில் வெளியான ஓட்டிங் லிஸ்ட்டின் படி, அர்ச்சனாவிற்கு மிகக்குறைந்த ஓட்டுக்களே கிடைத்துள்ளன. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து கண்டிப்பாக அர்ச்சனா அல்லது சோம் சேகர் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆகையால், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.