அடுக்கடுக்கான கேள்விகள்: பாலாஜிக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி?
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கால் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.
அப்போது பாலாஜி அடுக்கடுக்கான கேள்விகளை தொடுக்க, ஆரி திணறும் காட்சிகள் உள்ளது. கால் ஆரம்பித்தவுடன் ’நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகர். ஆனால் வீட்டிற்கு வெளியே’ என்று குதர்க்கமாக ஆரம்பிக்கும் பாலாஜி, ‘நான் யாரையும் காலி பண்ணி விளையாட மாட்டேன், எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவோம் என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள்.
ஆனால் ஆரி நீங்கள் யாரும் யாரையும் காலி பண்ணி விளையாடவில்லையா? என்று முதல் கேள்வியை தொடுக்கும் பாலாஜி, அதன்பிறகு ’நான் கெட்டவன் என்று சொல்பவனை கூட நம்புவேன், நான் நல்லவன் என்று சொல்பவனை கூட நம்பலாம், ஆனால் நான் மட்டும் தான் நல்லவன் என்று சொல்றான் பாருங்க அவள் நம்பவே முடியாது’ என்று பாலாஜி அடுக்கடுக்காக கேள்வி கேட்கிறார்.
இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சிரித்தபடியே நழுப்பி வருகிறார் ஆரி. இருப்பினும் இன்றைய முழு நிகழ்ச்சியில் ஆரி இதற்கு பதிலடி கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
#Day58 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/umswACEeWZ
— Vijay Television (@vijaytelevision) December 1, 2020