அச்சுறுத்தும் புதிய கொரோனா வைரஸ்.! அதிரவைக்கும்., 7 அறிகுறிகள்!
புதிய வகை கொரோனா வைரஸ் என்றும், உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் என்றும், வேகமாக பரவும் தகவல்களால் உலகம் பீதியில் உழல்கிறது. இந்த உருமாற்றம் பெற்ற கொரோனாவின் அறிகுறிகள் என்னென்ன.?, இப்போது பார்க்கலாம்..
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளில், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வைரஸ் காலப்போக்கில் அதன் மரபியல் கூறுகளில், மாற்றம் பெற்று, உருமாற்றம் அடைவது இயல்பான ஒன்றுதான் என்கிறது, மருத்துவ உலகம்.
கடந்தாண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரையில், 17 முறை, தனது மரபியல் கூறுகளை மாற்றிக்கொண்டுள்ளது.
இந்த உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசின் அறிகுறிகள் சிலவற்றை, இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே, கொரோனா அறிகுறிகளான, வறட்டு இருமல், காய்ச்சல், வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவற்றுடன், புதிதாக, 7 அறிகுறிகளும், கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான சோர்வு, பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசை வலிகள், தோல் வெடிப்புடன் கூறிய தோல் அரிப்பு ஆகியவை, உருமாற்றம் பெற்றுள்ள புதிய கொரோனா வைரசின் அறிகுறிகள் என, இங்கிலாந்து சுகாதாரத்துறை பட்டியலிட்டுள்ளது.