60 நாள்ல்ல என்ன தான் செஞ்சீங்க: பிக்பாஸ் கேள்விக்கு திருதிருவென முழிக்கும் ஹவுஸ்மேட்ஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்கள் முடிவடைந்து இன்று 61 வது நாள் ஆரம்பித்துள்ளதை அடுத்து இந்த பிக்பாஸ் வீட்டில் வாழ்ந்த 60 நாட்களில் என்ன செய்தீர்கள் என்பதை உங்கள் ரசிகர்களுக்கு சொல்லுங்கள் என்று பிக்பாஸ் கேட்கின்றார்.
இதனை அடுத்து ரமேஷ், ஆஜித், கேபி, ரம்யா பாண்டியன், சோம், அனிதா உள்ளிட்டோர் பதில் சொல்ல முடியாமல் திருதிருவென முழிக்கின்றனர். திடீர் என்று கேட்டால் எப்படி சொல்வது என அஜித்தும், கொஞ்சம் டைம் எடுத்துக்கலாமா பிக் பாஸ் என்று ரமேஷும், பஸ்ஸர் எப்போது அடிக்கும் என்று ஷிவானியும் கூறுகின்றனர்.
இந்த 60 நாட்களில் செய்தது ஒன்று கூட உங்களுக்கு ஞாபகம் வரவில்லையா என பிக்பாஸ் மீண்டும் கேட்டதோடு இப்படி ஒரு வாய்ப்பு இனிமேல் வராது என்றும் அவர் கூறுகின்றார். அதன்பின்னர் அனிதா மட்டும் நான் எல்லோருக்கும் ஹேர்ஸ்டைல் செய்து கொடுத்தேன்’ என்று கூறி சமாளிக்கின்றார்.
பிக்பாஸின் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுவதில் இருந்தே ஒருசில போட்டியாளர்கள் இந்த 60 நாட்களில் ஒன்றுமே செய்யவில்லை என்று தெரிகிறது என நெட்டிசன்கள் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். இதே அர்ச்சனா என்றால் அன்பு கொடுத்தேன் என்றும் பாலாஜி என்றால் தினசரி சண்டை போட்டேன் என்றும், ஆரி என்றால் அட்வைஸ் செய்தேன் என்றும் சனம் என்றால் உரிமைக்காக வாக்குவாதம் செய்தேன் என்று கூறியிருப்பார்கள் என நெட்டிசன்கள் பதில் அளித்து வருகின்றனர். உண்மையில் ஹவுஸ்மேட்ஸ் என்ன பதில் சொன்னார்கள் என்பதை நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்,