Breaking News

பிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகைக்கு 4 கள்ளக்காதலர்களா? கணவர் தரும் அதிர்ச்சி தகவல்!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய நடிகை ஒருவருக்கு நான்கு கள்ளக்காதலர்கள் இருந்ததாக அவரது கணவரே புகார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14வது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் நடிகை பவித்ரா புன்யா என்பவர் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் நிச்சயதார்த்தம் மட்டுமே முடிந்துள்ளது என்றும் சக போட்டியாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.  
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்த நடிகை பவித்ராவின் கணவர் என்று கூறப்படும் சுமித் என்பவர் புன்யா தன்னை மோசடி செய்து விட்டதாகவும் எங்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது எனக்கும் பவித்ராவுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது என்றும் நான் அவர் பெயரை பச்சை குத்தியதே இதற்கு சான்று என்றும் ஆனால் திருமணத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று பவித்ரா கேட்டுக் கொண்டதால் நான் யாரிடமும் சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.  

அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின்னர் அவர் 4 பேருடன் கள்ளத் தொடர்பில் இருந்தார் என்றும் இனிமேலும் அவரை மன்னிக்க முடியாது என்றும் என்னை விவாகரத்து செய்து விட்டு அவர் யாருடன் வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.