2021 முதல் எந்தெந்த மொபைல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது? இதோ லிஸ்ட்!
2020 ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில், பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் ஆப் பயன்பாடான வாட்ஸ்அப் சில பழைய ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவதாக கூறப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு நெருங்கி வருவதால், அவுட்-டேட்டட் ஆப்ரேஸ்ட்டிங் சிஸ்டத்தில் (அதாவது சற்றே பழைய இயக்க முறைமையில்) இயங்கும் ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் முடிவுக்குக் கொண்டுவருகிறது.
பேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்த மெசேஜிங் ஆப் ஆனது iOS 9-க்கு அல்லது ஆண்ட்ராய்டு 4.0.3-க்கு முன் வெளியான ஓஎஸ் மூலம் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் வேலை செய்வதை நிறுத்திவிடும் என்று கூறப்படுகிறது.
பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் மேற்குறிப்பிட்ட அவுட்-டேட்டட் இயக்க முறைமைகளில் இயங்கவில்லை என்பதால் யாரும் கவலைப்பட தேவையில்லை. ஒருவேளை நீங்கள் மிகவும் பழைய மொபைலை பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் ஓஎஸ்-ஐ அப்டேட் செய்வது நல்லது, அல்லது புதிய ஸ்மார்ட்போனிற்கு மாறலாம்.
ஐபோன்களைப் பொறுத்தவரை, ஐபோன் 4 வரையிலான அனைத்து ஐபோன் மாடல்களும் ஐபோனுக்கான வாட்ஸ்அப் ஆதரவை இழக்கும். அதாவது, ஐபோன் 4 எஸ், ஐபோன் 5, ஐபோன் 5 எஸ், ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 எஸ் ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவதற்கு தங்கள் இயக்க முறைமையை iOS 9 அல்லது அதற்குப் பிறகு வந்த ஓஎஸ் உடன் அப்டேட் செய்ய வேண்டும்.
மறுகையில் உள்ள ஆண்ட்ராய்டைப் பொறுத்தவரை, 4.0.3 வெர்ஷனை ஐ விட முந்தைய ஆண்ட்ராய்டு பதிப்பில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்திவிடும். மறுபடியும் இந்த இடத்தில, ஆண்ட்ராய்டு 4.0.3 மூலம் இயங்கும் ஸ்மார்ட்போன்கள் பெரிய எண்ணிக்கையில் இல்லை என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
இருப்பினும், சில மாடல்கள், அதாவது எச்.டி.சி டிசையர், எல்ஜி ஆப்டிமஸ் பிளாக், மோட்டோரோலா டிரயோடு ரேஸ்ர் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 2 போன்ற ஸ்மார்ட்போன்களை நீங்கள் வைத்திருந்தால், அப்டேட் செய்து கொள்ளவும். இது தவிர்த்து பழைய ஆண்ட்ராய்டு பதிப்பில் இயங்கக்கூடிய பிற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களும் இருக்கலாம், அவைகள் 2020 முடிவடையும் போது வாட்ஸ்அப்பிற்கான ஆதரவை இழக்கக்கூடும்.
சில பயனர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களிலேயே வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயன்படுத்தக்கூடும், ஏனெனில் அவற்றின் ஓஎஸ் அப்டேட் உடன் குறிப்பிட்ட ஆதரவிற்கான பேட்சை பெற்றிருக்கலாம். இருப்பினும், மற்றவர்களுக்கு, ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்குவதே ஒரே தீர்வாக இருக்கும்.
நிறுவனத்தின் அனைத்து அம்சங்களையும் தொடர்ந்து அனுபவிக்க பயனர்கள் தங்கள் குறிப்பிட்ட ஐஓஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ஐ அப்டேட் ஆகச்சொல்லி வாட்ஸ்அப்பின் ஆதரவு பக்கமும் பரிந்துரைக்கிறது.
நீங்களொரு ஐபோன் பயனர் என்றால் Settings > General > Information க்கு செல்லலாம். அங்கு உங்கள் ஐபோனில் என்ன மென்பொருள் பதிப்பு உள்ளது என்கிற தகவல்களைக் காணலாம். ஆண்ட்ராய்டு பயனர்கள் Settings > About Phone வழியாக குறிப்பிட்ட தகவலை அறியலாம்.
ஒவ்வொரு காலண்டர் ஆண்டின் முடிவிலும் பழைய iOS மற்றும் Android ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் முடித்து கொள்வது ஒரு வழக்கமான நடவடிக்கையே ஆகும். கடந்த ஆண்டு, iOS 8 அல்லது அதற்கு மேற்பட்ட பழைய மாடல்களுக்கான ஆதரவையும், ஆண்ட்ராய்டு 2.3.7 அல்லது அதற்கு மேற்பட்ட பழைய ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவையும் வாட்ஸ்அப் முடித்துக்கொண்டது.