ஆஸி.க்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்திய அணி வெற்றி..நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கான்பெராவில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் வந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்தது.
162 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களுடன் சுருண்டது. தமிழக வீரர் நடராஜன் மற்றும் யுவேந்திர சகல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.