Breaking News

அர்ச்சனாவின் 'அன்பு' குறித்து கேள்வி எழுப்பிய சுரேஷ்!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வரும்வரை குரூப் என்றால் என்னவென்றே தெரியாமல் போட்டியாளர்கள் இருந்தனர். ஆனால் அர்ச்சனா எண்ட்ரி ஆன உடனேயே தனக்கென ஒரு குழுவை அமைத்துக் கொண்டு அந்த குரூப்பில் உள்ளவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

பார்வையாளர்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களான பாலாஜி, ரம்யா, சம்யுக்தா உள்பட ஒரு சிலரும் ஏன் கமல்ஹாசனே கூட சில சமயங்களில் அர்ச்சனாவிடம் குரூப் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த தனது விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் அர்ச்சனாவின் அன்பு குறித்து அவர் கூறிய போது ’என்னுடைய மைண்டில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது, அரவணைக்கும் அன்பா? அல்லது ஆளை கொல்லும் அம்பா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த கேள்விக்கு விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது