Breaking News

சோமை காப்பாற்றிய கேபி, கொந்தளித்த சனம், பாலாஜி!

பிக் பாஸ் வீட்டில் நேற்று முதல் கால் சென்டர் டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் பாதி போட்டியாளர்கள் கால் சென்டர் பணியாளர் போலவும், மீதம் இருப்பவர்கள் அதிருப்தியில் இருக்கும் வாடிக்கையாளர் போலவும் இருப்பார்கள். 

புதுவித பிரம்மாண்டமான பார்வை அனுபவத்திற்கு சாம்சங் QLED டிவி இந்த டாஸ்கில் நேற்று அர்ச்சனா - பாலாஜி, சனம் - சம்யுக்தா ஆகியோர் போனில் பேசியது பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்தது. 



இந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோவில் சோம் சேகர் கால் சென்டரில் இருக்கும் கேப்ரியல்லாவுக்கு கால் செய்து பேசுகிறார். மற்றவர்களை போல கோபத்துடன் எதுவும் பேசாமல், கேப்ரியல்லாவின் நாய் பற்றி பேசினார் சோம். மேலும் ஒரு கட்டத்தில் போனை வைத்துவிடு என சோம் கூறியதால் கேபி உடனே வைத்துவிட்டார். 'I hope you win' என அவர் கூறி துண்டித்துவிட்டார். 

சோமை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற தான் கேபி இப்படி வேண்டுமென்றே செய்திருக்கிறார். இதனால் சோம், பாலாஜி உள்ளிட்ட மற்ற போட்டியாளர்கள் இது பற்றி கோபத்துடன் பேசி இருக்கிறார்கள். 'நேற்று நான் சொன்னது உருத்தியாகி விட்டது' என பாலாஜி குற்றம்சாட்டி இருக்கிறார். 

அர்ச்சனா கேங்கில் இருக்கும் கேபி சோம் இருவரும் பிளான் செய்து இப்படி செய்து இருக்கிறார்கள் எனவும் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.