காமெடி நடிகருடன் கவர்ச்சியான குத்தாட்டம் போட்ட சம்யுக்தா: வீடியோ வைரல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய சம்யுக்தா ஆரம்பத்தில் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய போட்டியாளராக இருந்தார். ஆனால் அதன் பின்னர் திடீரென அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. நீதிமன்ற டாஸ்க்கில் ஆரியுடன் ஏற்பட்ட மோதல், பாலாஜியால் கேப்டனான பின் அவரது நடவடிக்கையில் ஏற்பட்ட் மாற்றம், இவை அனைத்தையும் விட ‘வளர்ப்பு சரியில்லை’ என்று அவர் பயன்படுத்திய வார்த்தை ஆகியவை பார்வையாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும் பாலாஜி உடன் இணைந்து கொண்டு ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டதும் அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று அவருக்கு இரண்டு குறும்படங்கள் போடப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சம்யுக்தாவின் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சம்யுக்தாவும் பாவனாவும் காமெடி நடிகர் சதீஷுடன் தளபதி விஜய் நடித்த ’துப்பாக்கி’ படத்தின் பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ரசிகர்களின் கமெண்ட்டுக்களும் சுவாரஸ்யமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.