கோபத்தில் கத்திய ரியோ! அப்படி என்ன சொன்னார் சனம்?
பிக் பாஸ் 4 ஷோ கடந்த சில தினங்களாக பரபரப்பாக மாறி இருக்கிறது. அதற்கு காரணம் சில போட்டியாளர்கள் நடுவில் வரும் சண்டை தான். தினம்தோறும் எதாவது ஒரு காரணத்திற்காக புதிது புதிதாக சண்டை வருகிறது.
இன்று சனம் ஷெட்டி மற்றும் ரியோ இடையே சண்டை நடனத்திருப்பது தற்போது வெளிவந்திருக்கும் இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது. சனம் ஷெட்டியை வேறு ஒருவருடன் சேர்த்து வைத்து ரியோ பேசியதால் அவர் கோபத்துடன் வந்து வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்.
'உங்க ரெண்டு பேர் நடுவில் இருக்கும் friendship பார்க்க அழகாக இருக்கிறது என்று தான் நான் சொன்னேன்' என ரியோ விளக்கம் கூறினார். 'சொல்வதெல்லாம் சொல்லிவிட்டு இது அப்படியே பாசிட்டிவ் என சொல்வதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை' என சனம் கூறுகிறார்.
மேலும் தப்பான ஒருவருக்கு கால் பண்ணி சொன்னீங்க என சனம் குற்றம்சாட்ட, 'நான் யார் வாயில் இருந்து கேட்கவேண்டும் என நினைத்தேனோ அவரிடம் தன கேட்டேன்' என விளக்கம் சொல்கிறார். அதன் பின் ஒரு கட்டத்தில் சனமை பார்த்து ஆக்ரோஷமாக ரியோ 'Mind your words' என கத்தி இருப்பதும் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
தற்போது வைரலாகும் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோ இதோ..
#Day52 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/pOKYIvfp6U
— Vijay Television (@vijaytelevision) November 25, 2020