Breaking News

இந்த வார நாமிநேஷனில் சிக்கியவர்கள் யார் யார்?


பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சற்று முன் வெளியான முதல் புரமோவில் போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் இருவரை நாமினேஷன் செய்கின்றனர். எதிர்பார்த்தது போலவே ஆரியை பெரும்பாலான போட்டியாளர்கள் நாமினேட் செய்கின்றனர். 

தொடர்ந்து கமலஹாசனிடம் வாழ்த்துக்களை பெற்று வரும் ஆரிக்கு மக்கள் மத்தியில் மதிப்பு கூடி வருவதை புரிந்து கொண்ட போட்டியாளர்கள் கடுமையான போட்டியாளர் என்ற வகையில் வரை வெளியேற்ற வேண்டும் என்ற நினைப்பில் நாமினேஷன் செய்வதாக தெரிகிறது. இதனை அடுத்து ரம்யாவுக்கும் இந்த வாரம் எதிர்ப்பு வலுத்து உள்ளதை அடுத்து அவரும் நாமினேஷன் செய்யப்படுகிறார். 

ரம்யா நேற்று அர்ச்சனா குரூப் குறித்து பேசியதை அடுத்து அவரது குரூப்பில் உள்ள நிஷா, ரியோ, ரமேஷ் ஆகியோர் அவரை நாமினேட் செய்கின்றனர். மேலும் இதுவரை நாமினேஷனில் அதிகம் சிக்காத ஷிவானியும் நாமினேசன் செய்யப்படுகிறார் என்பதும் ஷிவானியை அர்ச்சனா, கேபி, ஆரி, ஆஜித் ஆகியோர் நாமினேட் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது