ரியோ-ஆஜித் கால்சென்டர் உரையாடலை கலாய்க்கும் ரம்யா!
பிக்பாஸ் வீட்டில் தற்போது கால்சென்டர் டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதற்கு முன்னர் பாலாஜி-அர்ச்சனா, சனம்-சம்யுக்தா, ரம்யா-ஜித்தன் ரமேஷ் மற்றும் கேபி-சோம் ஆகியோர்களின் உரையாடல் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று ரியோ மற்றும் ஆஜித் உரையாடல் நடைபெறுகிறது.இதில் ’இந்த வீட்டில் எல்லாமே தந்திரம், எல்லாமே ஸ்டேட்டர்ஜி என்று கூறுவது யார்? என்று ரியோ கேட்க அதற்கு பாலாஜிதான் என்று ஆஜித் சொல்கிறார்.
’அப்படியானால் சனம், அனிதா ஆகிய இருவரும் எல்லாத்தையுமே கேம் ஆகத்தான் பார்ப்பேன் என்று கூறிக்கொண்டே அவங்க ரெண்டு பேரும் நண்பர்கள் என்று சொல்லும்போது அதில் ஒரு அன்பு அழகாக இருக்கிறதே’ என்று ரியோ மீண்டும் கேள்வி எழுப்புகிறார். அப்போது ரம்யா ’பாலாகிட்ட கேட்க வேண்டியது எல்லாம் ஆஜித் கிட்ட கேட்டுக் கொண்டிருக்கிறார்’ என்று கலாய்க்கின்றார்.
உங்கள் மேல் வைக்கும் அன்பு ஏன் போலியானதாக இருக்கக் கூடாது என்று அஜித்திடம் கேட்கும் ரியோ, ‘உங்களுக்கு எதிர்பாராமல் அன்பு கிடைக்கிறது, அதை ஏற்றுக் கொள்கிறீர்கள், எதிர்பாராமல் கிடைக்கும் அன்பை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு? என்று கேட்கிறார். மேலும் இந்த வீட்டில் அன்பை எதிர்பார்ப்பது தப்பா? என்று கேள்வி எழுப்புகிறார், ரியோவின் கேள்விகளுக்கு ஆஜித் திணறி வருகிறார் என்பது தெரிவதால் அவர் இந்த வாரம் நாமினேட் செய்யப்படுவார் என தெரிகிறது
#Day53 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/jUJlKoRYcW
— Vijay Television (@vijaytelevision) November 26, 2020