பிக்பாஸ் எவிக்சனில் திடீர் திருப்பம்: தப்பித்தார் ரமேஷ், அப்ப சிக்கியது யார்?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை வரை குறைந்த வாக்குகள் பெற்று இருந்தவர் ரமேஷ் தான் என்று அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் திடீர் திருப்பமாக தற்போது ரமேஷ் காப்பாற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட ஏழு பேர்களில் ரமேஷ், சனம், சம்யுக்தா ஆகிய மூவரும் குறைந்த வாக்குகள் பெற்றிருந்ததாகவும் இதில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ரமேஷ் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது சற்று முன் வெளியான நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி சம்யுக்தா வெளியேறிவிட்டதாக தெரிகிறது.
ஏற்கனவே ரமேஷ் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து ரமேஷின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இன்று காலை முதல் மிஸ்டு கால்கள் அதிகமாக கொடுத்து வந்ததாகவும் கூறப்பட்டது. அதனடிப்படையில் ஒருவேளை ரமேஷ் நாமினேஷனில் இருந்து தப்பித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
‘வளர்ப்பு சரியில்லை’ உள்பட சர்ச்சைக்குரிய வகையில் சக போட்டியாளர்களிடம் பேசிய சம்யுக்தா இந்த வாரம் வெளியேற்றப்படுவது சரியானதுதான் என்றும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.