Breaking News

இது குறும்படமும் இல்லை, குருமா படமும் இல்லை; அர்ச்சனாவை கலாயத்த கமல்!


பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 55 நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு குறும்படம் கூட போடவில்லை என்ற அதிருப்தி பார்வையாளர்கள் மத்தியில் இருந்தது. குறிப்பாக அர்ச்சனா தன்னுடைய மைக்கையும் சோம் மைக்கையும் கழட்டி பேசியதை குறும்படம் போட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. 

ஆனால் இன்று கமல்ஹாசன், சம்யுக்தாவுக்கு ஒரு குறும்படம் போட்டு காட்டுகிறார். ‘வளர்ப்பு சரியில்லை’ என்று சம்யுக்தா கூறியதை சுட்டிக்காட்டிய கமல், ஆரி கூறியது உங்கள் தாய்மையை குறித்து அல்ல என்று தான் எனக்கு தோன்றியது, இருப்பினும் ஒரு குறும்படம் பார்ப்போம் என்று கூறிய கமல், இது குறும்படமும் அல்ல, அர்ச்சனா கூறியது போல் குருமா படமும் அல்ல, படம் என்று கூறி சம்யுக்தாவுக்கு ஷாக் கொடுத்ததோடு அர்ச்சனாவையும் போகிற போக்கில் கலாய்த்தார். 

மொத்தத்தில் ஆரிக்கு மீண்டும் ஒருமுறை கமல் சப்போர்ட் செய்துள்ளார். இந்த சீசனின் முதல் குறும்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அர்ச்சனா குரூப் செய்து வரும் அன்பு அட்டாகசங்களுக்கும் குறும்படம் வேண்டும் என பார்வையாளர்கள் கமல்ஹாசனிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்,