ரம்யா கேள்வியால் திணறிய ஜித்தன் ரமேஷ், அலறிய அர்ச்சனா கேங்!
இந்த வாரம் வழங்கப்பட்டு உள்ள கால் சென்டர் டாஸ்கில் போட்டியாளர்கள் என்ன கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம் என கூறப்பட்டதால் பலரும் கேட்கும் கேள்விகள் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி உள்ளன.
நேற்று பாலாஜியை அர்ச்சனா கேட்ட கேள்விகள் பல்வேறு பிரச்சனைகளை உருவாயத்தையும், அதனால் பெரிய கலவரமே பிக் பாஸ் வீட்டில் நடந்ததையும் பார்த்தோம்.
இந்நிலையில் தற்போது இன்றைய மூன்றாவது ப்ரொமோ வீடியோவில் அர்ச்சனா கேங்கை அலற வைக்கும் வகையில் சில கேள்விகளை ரம்யா பாண்டியன் கேட்டிருக்கிறார். ரம்யா பாண்டியன் ஜித்தன் ரமேஷுக்கு போன் செய்து நிஷா பற்றி கேட்ட கேள்விகள் மற்றும் அதற்கு ஜித்தன் ரமேஷ் பதில் சொன்ன விதம் ஆகியவற்றை பார்த்து தான் அர்ச்சனா மற்றும் ரியோ ஷாக் ஆகி இருக்கிறார்கள்.
'என்னை நாமினேட் செய்வதற்கு ஒரு காரணம் சொல்லுங்கள்' என ரம்யா கேட்க, 'நீங்க சைலன்ட் கில்லர்' என ஜித்தன் ரமேஷ் பதில் சொல்கிறார். அதன் பின் நிஷாவை நாமினேட் செய்ய இரண்டு காரணத்தை சொல்லுங்க என ரம்யா அவரை கேட்க, ரமேஷ் யோசித்துக்கொண்டே மௌனமாக இருந்தார். அதன் பின் பேசத்தொடங்கிய அவர் 'ஒருத்தரை நம்பி இருக்க கூடாது எப்போதும்' என பதில் கூறினார் ரமேஷ்.
உடனே ரம்யா சுதாரித்து கொண்டு 'அவர் யாரை நம்பி இருக்கிறார்' என கேட்க அதற்கு பதில் சொல்ல ரமேஷ்திணறுகிறார்.
இதையெல்லாம் டிவியில் பார்த்து அர்ச்சனா - ரியோ கேங் அலறிவிட்டது. 'தயவு செய்து சொதப்பாதீங்க னா' என அர்ச்சனா கூறி இருப்பதும் தற்போது வெளிவந்திருக்கும் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
நீங்களே பாருங்கள்..
#Day52 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/X3omjx4o79
— Vijay Television (@vijaytelevision) November 25, 2020