அர்ச்சனாவின் ஆதரவாளர்கள் யார் யார்? நேருக்கு நேர் போட்டுடைத்த பாலாஜி!
பிக்பாஸ் வீட்டில் குருப்பிஸம் இருப்பதை முதல்முதலில் போட்டு உடைத்தவர் சுரேஷ் தான் என்றாலும் அதன் பிறகு குருப்பிஸம் இருப்பதாக அவ்வப்போது வலியுறுத்தி வருபவர்கள் ஆரி மற்றும் பாலாஜிதான். குறிப்பாக பாலாஜி தனக்கு என குரூப்பை வைத்திருந்தாலும் மற்றவர்களின் குருப்பிஸம் இருப்பதை வெளிப்படையாகவே கூறி வருகிறார் என்பதும் முகத்துக்கு நேராகவே யார் எந்த எந்த குரூப் என்று கூறி வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் கால்சென்டர் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. கால்செண்டர் ஊழியர்களாக ரம்யா, சம்யுக்தா மற்றும் பாலாஜி ஆகியோர் இருக்க அவர்களிடம் சக போட்டியாளர்கள் கேள்விகளை கேட்கலாம் என்றும் கேள்விகள் கேட்பதற்கு எந்த விதமான வரைமுறையும் இல்லை என்றும் பிக்பாஸ் அறிவிக்கின்றார்.
இதனை அடுத்து அர்ச்சனா பாலாஜிக்கு கால் செய்து ‘உங்களுக்கு ரொம்ப பிடித்தவர்களை முன் வைத்து விளையாடுகிறீர்கள்; என்று நீங்கள் கூறினீர்கள். அவர்கள் பெயர்களை தெரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறியபோது பாலாஜி ஓபனாக, ‘முதலில் நீங்கள் முன்னிறுத்தி விளையாடுவது சோம், இரண்டாவதாக ரியோ, மூன்றாவதாக கேபி என்று பதில் கூறுகிறார். இந்த பதில் அர்ச்சனாவுக்கு அதிர்ச்சியை அளித்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் புன்சிரிப்பை உதிர்த்து சமாளிக்கிறார்.
அர்ச்சனாவின் குரூப்பில் உள்ளவர்கள் யார் யார் என்பது பார்வையாளர்களாகிய நமக்கு தெரியும் என்றாலும், அதை அவரிடமே போட்டு உடைத்த பாலாஜியால் பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து வரும் நாட்களில் அர்ச்சனா மற்றும் பாலாஜி இடையே கடுமையான விளையாட்டு ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Day51 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/camrcnHH0F
— Vijay Television (@vijaytelevision) November 24, 2020