Breaking News

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த கருணாவுக்கு 15 கோடி – நாமலின் பரபரப்பு தகவல்!

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் என்றும் தாக்குதல் ஒப்பந்தம் கருணாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அதற்காக கருணா 15 கோடி ரூபா கேட்டார் என்றும் பரபரப்பு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

நாமல் குமார இந்த தகவலை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.  

அதேவேளை நாட்டை குழப்ப முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீனை கொலை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.  

நான் அனைத்தையும் பொறுப்போடு கூறுகிறேன். அனைத்துக்குமான ஒலிப்பதிவுகளை என்னால் முன் வைக்க முடியும் என்று நாமல் குமார இந்த உரையாடலில் கூறியுள்ளார்.  

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்வதற்கு முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரினால் தனக்கு கொந்தராத்து ஒப்படைக்கப்படடதாகவும் அவர் கூறியுள்ளார்.  

மேலும் இந்தப் படுகொலை சூழ்ச்சிக்குப் பின்னால் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இருப்பதாக மேற்படி இருவரும் தெரிவித்திருந்ததாகவும் நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.