Bigg Boss 4 - யார் இந்த சோம் சேகர்? முகெனைப் போல வெற்றி பெறுவாரா?
ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஒரே நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் சீசன் 4 தான். கொரோனா காரணமாக இந்த ஆண்டு தள்ளிப் போன பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று கமல்ஹாசன் தொகுத்து வழங்க கோலாகலமாக தொடங்கியுள்ளது.
அனைவரும் எதிர்பார்த்தது போல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ரியோ ராஜ் முதல் போட்டியாளராக நுழைந்தார். அவரைத் தொடர்ந்து நடிகை சனம் ஷெட்டி, ரேகா மற்றும் மாடலான பாலா, செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், சீரியல் நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி ஆகியோர் நுழைந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து பத்தாவது போட்டியாளராக சோம் சேகர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த சீசனில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற முகேன் ராவைப் போலவே சாமும் தமிழ் நாட்டில் அதிகம் பிரபலமில்லாத ஒரு மாடல் ஆவார். மேலும் அவர் அது மட்டுமின்றி, ஆல்பம் பாடல்கள், குறும்படங்கள், விளம்பரங்கள் போன்றவற்றில் நடித்தும் உள்ளார்.
MMA வீரர்
சாம் MMA எனப்படும் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் குத்துச் சண்டை வீரரும் ஆவார். அவர் இதற்கு முன்னர் விஜய் டிவியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அவரின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் அடித்தது குறிப்பிடத்தக்கது. கமல் ஹாசன் அவரை இன்று அறிமுகப்படுத்திய பின், அவர் தான் இந்த இடத்திற்கு வருவதற்கு பத்து வருடங்கள் கஷ்டப்பட்டதாகவும் அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், ஆனால் தனக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்றும் கூறியுள்ளார். சோம் சேகருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் கட்டாயம் அவருக்கு பெண் ரசிகைகள் அதிகமாகலாம். எதுவாயினும் இந்த இளம் மாடல், கட்டாயம் மற்ற போட்டியாளர்களுக்கு போட்டியாக அமைவார் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் அவர் சிங்கிள் என்பதால் பிக்பாஸ் வீட்டில் லவ் ட்ராக்கில் அவர் பயணிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
சோம் சேகரை கடந்த ஆண்டு வெற்றி பெற்ற முகேனுடன் தற்போதே தொடர்பு படுத்திப் பேசி வருவதால் இவர் அவரைப் போல வெற்றி பெற்று சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.