திலீபனை நினைவுகூர்வதும், போதைவஸ்து கடத்தல்காரர்களை நினைவுகூர்வதும் ஒன்றுதான்; கெஹலிய
திலீபன் உன்னதமான தியாகி.தமிழ் மக்களிற்கு நீதி கோரியே அவர் உண்ணாவிரதமிருந்தார்.அவரை சாதாரண போதைபொருள் வியாபாரியுடன் ஒப்பிட்டதை கண்டித்துள்ளனர் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள்.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான தியாக தீபம் திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாதென, வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் கெஹலிய, யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே, கேள்வியொன்றிற்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்.
பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துமெனவும் ஆகையால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் கூறினார்.
'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது தடைசெய்யப்பட்ட பங்கரவாத அமைப்பாகவே இருக்கின்றது. அவ்வாறு தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினரை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது. அதனடிப்படையிலையே தீலிபனை நினைவு கூருவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.
'மேலும் ஒசாமா பில்லேடன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்காவில் சிலை வைக்க முடியாது. அது போலவே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராகவே திலீபனும் காணப்படுகின்றார். ஆகையினால் அவருக்கு சிலை வைக்கவோ, நினைவு கூரவோ முடியாது.
'
இதேவேளை, இன்று திலீபனுக்கு நினைவேந்தல் என்றும் இது போல இன்று ஒருவர் நாளை ஒருவர் என நினைவேந்தல் செய்ய முற்படலாம். அதனாலே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களை நினைவு கூர தடை விதிக்கப்படுகிறது' என்றார்.
இதனையே குடாநாட்டு ஊடகவியலாளர்கள் சார்பில் அவர் முன்னிலையிலேயே எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டமை அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.