Breaking News

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 இலங்கையர்கள் பிரான்ஸில் கொலை!

பிரான்ஸில் Noisy-le-Sec நகரில் நேற்று (03) சனிக்கிழமை காலை இடம்பெற்ற குடும்ப வன்முறை காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் நால்வர் சிறுவர்கள் எனவும், ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றனர்.

தாக்குதலுக்கு இலக்கான மற்றுமொரு சிறுவன் இரத்தக்காயங்களோடு சம்பவம் இடம்பெற்ற வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மதுச்சாலை ஒன்றுக்குச் சென்று உதவி கோரியுள்ளான்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சில நிமிட இடைவெளியில் வந்து சேர்ந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

வீடு முழுவதும் இரத்தம் தெறித்து இருக்க ஐந்து பேரின் சடலங்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் 'கோமா' நிலையில் இருந்ததாகவும், இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.