Breaking News

ரஜினி, கமலுக்கு எதிராக தேர்தலை சந்திப்போம் - கௌதமன் பரபரப்பு பேட்டி!

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வலியுறுத்தியும் நெல்லை ரயில் நிலையம் முன்பு முல்லைநில தமிழர் விடுதலைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குனரும், நடிகருமான கௌதமன் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கௌதமன், '' விவசாயத்திற்கு எதிரான சட்டத்தை பாராளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த சட்டம் பெருமுதலாளிகளுக்கு ஆதரவானது என்பதை ஒருபோதும் ஏற்றுகொள்ளமுடியாது. இதனை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் தமிழக அரசு அமைச்சரவை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.  

''தமிழக அமைச்சரவை கூட்டி விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை எதிர்க்கவில்லை என்றால் விவசாயி என்ற சொல்லே முதல்வருக்கு அவப்பெயராகும்.மத்திய மாநில அரசுகள் இந்த சட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.  

''2021 ம் ஆண்டு தேர்தலில் தமிழ் அமைப்புகளோடு கூட்டணி அமைத்து போட்டியிட இருப்பதாக கூறியவர், பெருந்தொகையை பெற்றுகொண்டு அரசியலுக்கு வரும் ரஜினி, கமலின் நிலையைதான் நாங்கள் எதிர்க்கிறோம். எங்களை அடமானம் வைக்கும் ரனத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம். ரஜினி, கமலுக்காக களத்தில் காத்திருக்க இருப்பதாக தெரிவித்தார்.