Breaking News

மட்டக்களப்பில் கோர விபத்து! - இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் நேற்றிரவு (01) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் சொகுசு(மைக்ரோ) பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் புதுக்குடியிருப்பு கந்தசாமி ஆலய வீதியை சேர்ந்த 24 வயதுடைய துலக்ஸன் மற்றும் 20 வயதுடைய நிலுக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தினை தொடர்ந்து பொதுமக்களினால் பஸ் தாக்கப்பட்டதுடன் பஸ் சாரதியும் நடத்துனரும் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தினை தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.