Breaking News

தமிழர் இலங்கையின் பூர்வீகம் என நிரூபிப்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை - எல்லாவெல


வாடகை வீட்டில் இருக்கும் தமிழர்கள் சிங்கள மக்களுக்கு தொல்லை பண்ணக்கூடாது - எச்சரிக்கிறார் தேரர் “ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமை இருக்கின்றது.

ஆனால் வாடகை வீட்டில் இருக்கும் போது வீட்டு உரிமையாளருக்குக் குழப்பம் விளைவிக்கக்கூடாது. இதனை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும். பெரும்பான்மையின மக்களுக்கு அவர்கள் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது.” 

இவ்வாறு எச்சரிக்கை கலந்த தொனியில் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண தொல்லியல் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர்.

நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனின் அண்மைய நாடாளுமன்ற உரை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “இலங்கையின் முதல் சுதேசிகளின் மொழி தமிழ் என்றும், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் எனவும் விக்கினேஸ்வரன் சொல்லியிருப்பது அப்பட்டமான பொய். அதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை” 

இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. மாறாகப் பிரச்சினைகள்தான் உருவாகும். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எனவும், பூர்வீகம் எனவும் நிரூபிப்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.