அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வெளியீடு! (முழுமையான விபரம் உள்ளே)
2020.09.21 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்:
01. குடிசன மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு - 2021
இலங்கையில் குடிசன மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு 10 வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுவதுடன் கணக்கெடுப்பு கட்டளைச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக, தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அடுத்த கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டில் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின் மூலம் தேசிய கொள்கையை வகுப்பதற்கும் திட்டம் தயாரிப்பதற்கும் தேவையான குடிசன எண்ணிக்கை, அதன் புவியியற் பரம்பல், இன ரீதியிலான பரம்பல் மற்றும் மக்கள் தொகை, புள்ளி விபரங்கள், சமூக பண்புகள் முதலானவற்றைப் போன்று வீடுகள் தொடர்பான தரம் மற்றும் தற்போதைய தரவுகள் மற்றும் தகவல்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் வழங்கப்படும். உலகளாவிய ரீதியிலும் நாட்டிற்குள்ளும் நிலவிய ஊழஎனை - 19 தொற்று நிலைமை காரணமாக ´ குடிசன மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு 2021´ இல் திட்டமிடும் பணிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், கீழ் குறிப்பிட்ட வகையில் இந்த கணக்கெடுப்பு பணிகளை நடத்துவதற்காக நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்த கணக்கெடுப்பின் பட்டியலிடும் திட்ட பணிகளை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து மே மாதம் வரையில் மேற்கொள்ளல்.
• கணக்கெடுப்பு கட்ட பணிகள் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரையில் நடத்துதல்.
• தரவுகளை விளம்பரம் செய்தல் - 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2022 மே மாதம் வரை மேற்கொள்ளல்.
• கணக்கெடுப்பு திட்டப்பணியில் திரட்டப்படும் தகவல்களின் பிழையின்மையை உறுதி செய்வதற்காக நடத்தப்படும் கணக்கெடுப்புக்கு பிந்திய ஆய்வுகள் 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும்.
02. வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவையின் உப குழுவின் கூட்டம்
நாட்டிற்குள் வாழ்க்கைச் செலவை நிலையானதாக முன்னெடுப்பதற்கு தேவையான கொள்கை மற்றும் நடைமுறை தீர்வுகளை வழங்குவதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவின் முதலாவது கூட்டம் அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் 2020.08.31 ஆம் திகதி நடத்தப்பட்டது. அதற்கமைவாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி சந்தைக்கு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்துகொள்ளல் மற்றும் வாழ்க்கைச் செலவை நிலையானதாக முன்னெடுக்கும் ஒழுங்குமுறைக்காக கீழ் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பிலான அதன் உப குழு கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானம் வர்த்தக அமைச்சரால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதன் தீர்மானத்திற்கு அமைவாக செயற்படுத்துவதற்காக அமைச்சரவையில் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.
• வாழ்க்கைச் செலவை குறைப்பது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளும் போது அந்த பிரச்சினைகள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் பொருட்கள் குறித்து கூடுதலாக கவனம் செலுத்தல்.
• விவசாயிகளை உற்பத்தி நடவடிக்கைகளில் முழு மூச்சாக ஈடுபடுத்தும் வகையில் நிலையான தேசிய கொள்கையை முன்னெடுத்தல் மற்றும் அதற்கமைவாக இறக்குமதியை அத்தியாவசிய பொருட்களுக்கு மாத்திரம் வரையறுத்தல்.
• இடைத்தரகர்களின் நடவடிக்கையின் காரணமான பொருட்களின் விலைகள் அதிகரிப்பதாகவும் விவசாயிகளின் உற்பத்திக்கு உரிய விலையை வழங்கி நுகர்வோருக்கு நியாயமான விலைக்கு பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறையை வகுத்தல்.
• உள்ளுரில் உற்பத்தி செய்யக்கூடிய உயர் தரத்தைக் கொண்ட விதை வகைகளின் தட்டுப்பாடுகளுக்கு தீர்வு என்ற ரீதியிலும் பாவனையில் அகற்றப்பட்டுள்ள நிலையில் காணப்படும் உள்ளுரில் விதை வகைகளை பாதுகாப்பதற்காக விதை வங்கியொன்றை அமைத்தல்.
• காய்கறி மற்றும் பழ வகைகள் போன்ற உற்பத்திகளின் விலைகளை ஒழுங்குறுத்தி ஈடுகொடுக்க கூடிய விலைக்கு நுகர்வோருக்கு செயல்திறன் மிக்கதாக விநியோகிக்கும் செயல்முறையொன்றை நடைமுறைப்படுத்தல். ´இதற்கமைவாக விவசாயிகளின் உற்பத்திகளை நேரடியாக கொள்வனவு செய்து நகர்ப்புறங்களில் மக்கள் பெருமளவில் உள்ள இடங்களில் விற்பனை செய்வதற்காக பெருந்தோட்டத்துறை, விவசாய அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சு முதலான அமைச்சுகளின் தலைமையில் வேலைத்திட்டமொன்றை வகுத்து நடைமுறைப்படுத்தல்.
• தேசிய ரீதியில் உற்பத்தி செய்யக்கூடிய மேலதிக பயிர் உற்பத்தி தொடர்பில் விவசாயிகள் தற்போது கூடுதலான ஈடுபாடு கொண்டிருப்பதினால் அவ்வாறான பயிர்களின் இறக்குமதியை இடைநிறுத்துவதற்கும் வேறு உள்ளுர் காய்கறி வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், இறக்குமதி செய்ய வேண்டிய பயிர் வகைகளுக்காக தேசிய ரீதியில் அவற்றுக்கு பதிலாக இருக்கக்கூடிய பயிர் வகைகளை ஊக்குவிப்பதற்கு முக்கியத்துவம் வழங்கல்.
• பெரும்போக நெல் அறுவடை சந்தைக்கு கிடைக்கும் வரையில் அரிசியின் விலை அதிகரிக்காத வகையில் பாதுகாப்பான மொத்த இருப்பை முன்னெடுத்து, அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள உறுதி செய்யப்பட்டுள்ள விலைக்கு சந்தையில் அரிசி இருப்பு இருப்பதை உறுதி செய்தல்.
• கோழி இறைச்சி உணவு தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் என்ற ரீதியில் சோளத்தின் இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டிருப்பதினால் சோளத்தின் விலை அதிகரிப்பதுடன், இதன் காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகளின் அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக சோளத்திற்கு பதிலாக மாற்று நடவடிக்கை என்ற ரீதியில் தற்காலிகமாக இறக்குமதி அனுமதிப்பத்திரத்தின் அடிப்படையில் கோதுமையை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக நாட்டிற்குள் சோளத்தின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான காணி, விதை, உரம் மற்றும் தேவையான தொழில்நுட்பங்களை வழங்குவதற்கு பொருத்தமான சேவைத் திட்டமொன்று, சம்பந்தப்பட்ட பொறுப்பு கூறக்கூடிய நிறுவனத்தினால் விரைவாக நடைமுறைப்படுத்துதல்.
• நுகர்வோருக்கு நியாயமான விலைக்கு மீனை கொள்வனவு செய்யக்கூடிய வகையில் கடற்றொழில் கூட்டுத்தாபனம் தனது விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அத்தோடு புதிதாக திறக்கப்படவுள்ள 40 விற்பனை நிலையங்களை விரைவாக திறத்தல்.
• உள்ளுர் பசும்பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு அதற்கு தேவையான வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அறிவை பசும்பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பண்ணையாளர்களுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
• சந்தையில் தேங்காயின் விலை அதிகரிக்கும் நிலை காணப்படுவதினால் நுகர்வோருக்கு நியாயமான விலைக்கு தேங்காயை கொள்வனவு செய்யக்கூடிய வகையில் பெருந்தோட்டத்துறை அமைச்சினால் மக்கள் பெருமளவில் உள்ள நகரங்களில் தேங்காயை விற்பனை செய்வதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
03. காணி அடிப்படை வசதிகள் மற்றும் காணி தகவல் சேவை கட்டமைப்பை நிறுவுதல்
இலங்கை நில அளவை திணைளத்தின் சேவைகளை மிகவும் செயல்திறன் மிக்கதாக மேற்கொள்ளும் நோக்கில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திணைக்களத்தின் நிர்வாக வலைப்பின்னலை ஸ்தாபித்தல் மற்றும் அதனூடாக நில அளவை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தல் மற்றும் பயன்களை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக காணி தொடர்பான தகவல்களை பயன்படுத்தும் தரப்பினருக்கு அவர்களின் சேவைக்கான இந்த தகவல்களை பயன்படுத்துவதற்கு இலகுவான வகையில் மேம்பட்ட அடிப்படை வசதிகளுடனான காணி தகவல் சேவை கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பதன் தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கை, கொரிய நாட்டின் கடன் உதவியை பெற்றுக் கொள்ளும் இராஜதந்திர வேலைத்திட்டத்தின் கீழ் 60.33 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டுடன் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் (ICTA) சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுக்கு அமைவாக ´காணி தரவு´ அடிப்படை வசதி மற்றும் காணி தகவல் சேவை கட்டமைப்பை ஸ்தாபிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக காணி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்டம்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் கீழ் குறிப்பிடப்பட்ட பாரியளவிலான நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்டங்களுக்கு அமைவான வரி சட்டத்தின் கீழ் அறவிடப்பட வேண்டிய வரிகளிலிருந்து விடுவிக்கக் கூடிய வகையில் இந்த திட்டத்தை விஷேட திட்டமாக கருதி செயற்படுத்துவதற்கும் அதற்கமைவாக அந்த திட்டத்திற்கான வசதிகளை செய்வதற்கும் நீர் வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஹேம்மாத்தகம நீர் வழங்கல் திட்டம்
ருவான்வெல்ல நீர் வழங்கல் திட்டம்
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டம்
இரத்மலானை ஃ மொரட்டுவ கழிவுநீர் அகற்றலுக்கான திட்டம்
களுகங்கை நீர் வழங்கல் விரிவுபடுத்தும் திட்டம்
05. ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் திருத்த சட்டம்
சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆபாச வெளியீடுகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய ஊடகங்கள் மூலமாக வெளியிடுதல் சமீப காலத்தில் வேகமாக அதிகரித்துள்ளது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் செயற்படுவதற்கு அமைவான ஒழுங்கு விதிகள், குற்றவியல் சட்டத்தில் மற்றும் ஆபாச வெளியீடு கட்டளைச் சட்டத்தில் உள்ளடங்கிய போதிலும் தற்போதைய நிலைமைக்கு இதன் ஒழுங்கு விதிகள் போதுமானதாக இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக இவற்றிற்கு தீர்வு என்ற வகையில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் முகவர் நிலையம் (ICTA) மற்றும் இலங்கை கணினி உடனடி பதில்கள் (CERT) குழுவினால் சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் புதிதாக திருத்த சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்கு தேவையான தகவல்களை உள்ளடக்கிய ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஆவணத்தை அடிப்படையாக கொண்டு புதிய சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்காக சட்ட வரைபு பிரிவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. 2005 ஆம் ஆண்டு இலக்கம் 13 இன் கீழான இலங்கை இடர் முகாமைத்துவ சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
இடர் முகாமைத்துவம் தொடர்பான தொழில் சார் துறையினரின் சிபாரிசு மற்றும் ஆலோசனைகளைப் போன்று கடந்த காலங்களில் இடம்பெற்ற அனர்த்தங்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவங்களை அடிப்படையாக கொண்டு தற்போதைக்கு பொருத்தமான வகையில் 2005 ஆம் ஆண்டு இலக்கம் 13 இன் கீழான இலங்கை இடர் முகாமைத்துவ சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக திருத்த சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்காக 2016 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 13 ஆம் திகதி வழங்கப்பட்ட அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு அமைவாக சட்ட திருத்த வரைபு பகுதியினால் தற்பொழுது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கு இடையில், மண்சரிவின் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்ட மற்றும் மண்சரிவு ஏற்படக்கூடிய அறிகுறிகளின் காரணமாக தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர்கள் மீண்டும் அதே இடங்களில் குடியிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளமையினால் இந்த நிலையை தவிர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அமைவாக தற்பொழுது திருத்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு வருவதுடன் இந்த திருத்த சட்ட மூலத்தில் இதன் ஒழுங்கு விதிகளை உள்ளடக்கி 2005 ஆம் ஆண்டு இலக்கம் 13 இன் கீழான இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக திருத்த சட்டமூலம் ஒன்றை தயாரிக்குமாறு சட்ட திருத்த வரைபு பிரிவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. பொரள்ளை எலியட் பிளேஸ் வீடமைப்பு திட்டத்தின் கட்டுமானப்பணிகளை திட்டமிடுதல் நிர்மாணித்தல் மற்றும் நிதி வழங்குதல்
அரசாங்க மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நடுத்தர வகுப்பு பயணாளிகளுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் 400 வீடுகளைக் கொண்ட அலகு பொரளை எலியட் பிளேஸ் வீடமைப்பு திட்டத்தை வகுத்து நிர்மாணித்தல் மற்றும் நிதிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனம் கொண்டுள்ள நிதி பிரச்சினைகளின் காரணமாக திட்டமிட்ட வகையில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாதமையால் சம்பந்தப்பட்;ட ஒப்பந்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டம் முக்கிய திட்டம் என்ற ரீதியில் அடையாங்காணப்பட்டுள்ளதுடன் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கென தேசிய போட்டித்தன்மையுடனான கேள்வி மனு கோரப்பட்டது. இதற்கு அமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற்பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய இந்த வீடுகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் ; M/s Access engineering PLC என்ற நிறுவனத்திடம் 9.37 பில்லியன் ரூபாவிற்கு (வட்டியற்ற) என்ற தொகைக்கு வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. இலங்கை மத்திய வங்கிக்காக ஓரு வருடம் தொடக்கம் 2 வருட காலப்பகுதிக்காக அமெரிக்க டொலர் ஃ இலங்கை ரூபாவை கொள்வனவு செய்தல் - விற்பனை பரிமாறும் வசதிகளை வழங்குதல்.
நாட்டுக்குள் வெளிநாட்டு நிதி புழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் வதிவிடமல்லாத முதலீட்டாளர்களுக்கு அரசாங்கத்தின் கடனீட்டு ஆவணங்களில் மற்றும் எனைய பிரிவுகளில் முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் வசதிகள் செய்யும் தேவை இலங்கை மத்திய வங்கியினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஷஷஇதற்கு அமைவாக, ஒரு வருடம் தொடக்கம் 2 வருட காலம் வரையில் அமெரிக்க டொலர் ஃ இலங்கை ரூபாவை கொள்வனவு செய்தல் -விற்பனை பணப்பரிமாற்றம்´ வசதிகளை அறிகப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதி சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக செயற்படும்பொழுது அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் வணிக வங்கிகளுக்கு ஏற்படக்கூடிய வெளிநாட்டு நாணயம் தொடர்பிலான இடையூறை வரையறுக்கும் நோக்கில் கீழ் குறிப்பிட்ட வகையில் செயற்படுவதற்காக நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது. • ஒரே வெளிநாட்டு அந்நிய செலாவணி விகிதத்தின் கீழ் அடிப்படை வெளிநாட்டு அந்நியச் செலாவணி பரிமாறல் மற்றும் பின்னர் மேற்கொள்ளப்படும் பரிமாறல்களை மேற்கொள்ளுதல்.
• சம்பந்தப்பட்ட முதலிட்டை பூர்த்தி செய்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு அந்நியச் செலாவணி பரிமாறலுக்காக, அபராதத்திற்கு உட்பட்டதாக அதுவரையில் நிலவும் அந்நியச் செலாவணி விகிதத்திற்கு இந்த பரிமாறலை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குதல்.
• இந்த வசதிகளினால் நாட்டுக்குள் அந்நியச் செலாவணி புழக்கம் அதிகளவில் காணப்படுமாயின் மாத்திரம் ஏற்புடையதுடன், ஆக குறைந்தது 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடக்கம் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான ஆக கூடிய தொகைக்கு உட்படுத்துதல்.
• இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொழுது அமெரிக்க டொலர் / இலங்கை ரூபா பரிமாறல் விகிதத்தில் தேய்மானம் இடம்பெற்றால் இலங்கை மத்திய வங்கிக்கு ஏற்படக்கூடிய நட்டத்தை திறைசேரியின் செலவு என்ற ரீதியில் கவனத்தில் கொள்ளக்கூடிய வகையில் எதிர்காலத்தில் இலங்கை மத்திய வங்கியினால் தனது ஈவு தொகைகளை திறைசேரிக்கு மாற்றும் பொழுது தீர்த்தல்.