யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் குறித்து விக்கினேஸ்வரன் பாரளுமன்றில் தெரிவித்த விடயம்!
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக அரசாங்கம் எதனையும் இதுவரையில் குறிப்பிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி விக்னேஸ்வரன் குற்றம்சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற உற்பத்தி வரி சட்டத்தின் கீழான 9 ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், எமது நாட்டின் சகல இனங்களையும் ஒன்றிணைத்து பொருளாதார புனரமைப்புக்கு வித்திடுவது சிறந்ததா, அல்லது தொல்பொருள் காரணத்தைக் காட்டி ஒரு இனத்தை முடக்குவதற்கு வழி வகுப்பது சிறந்ததா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொல்பொருள் ஆய்விடங்கள் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடமா, சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்த இடமா என்று கூட இதுவரையில் ஊர்ஜிதப்படுத்தவில்லை.
அத்துடன் தமது காணிகளில் பயிர் செய்யாது தடுக்கப்பட்ட திருகோணமலை குச்சவெளி மக்களுக்கு திரும்பவும் அவர்களது காணிகளில் விவசாயம் செய்ய ஆவன செய்யப்பட வேண்டும்.
இது தொடர்பில் பிரதமர் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவாதத்தில் கலந்துக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஸ்ணன்; இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
இதேவேளை எதிர்வரும் 22 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் மீண்டும் இடம்பெறவுள்ளது.
நேற்றைய தினம் 11 மணிக்கு இடம்பெற்ற குறித்த கூட்டத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளிக்காததன் காரணமாக இந்த கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.