மீண்டும் வீதி ஒழுங்குமுறையில் மாற்றம் - சாரதிகளுக்கு விஷேட அறிவிப்பு
நாளை முதல் பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் பயணிகள் பேருந்துகள், பாடசாலை சேவை பேருந்துகள், அலுவலக சேவை பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு மாத்திரமே பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்தார்.
மேலும், முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை இரண்டாம் ஒழுங்கையில் செலுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதிய போக்குவரத்து பாதை சட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல் நாளை விட தற்போது வாகன போக்குவரத்தின் வேகம் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதேபோல், வாகன விபத்துக்கள் இடம்பெறும் அளவும் குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நேர்மறையான விமர்சனங்களுக்கு அமைய புதிய போக்குவரத்து பாதை சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள தேவையேற்பட்டால் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.