Breaking News

பலத்த பாதுகாப்புடன் விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளையான்!


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை (03) சாட்சியமளிப்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு சிறையில் இருந்து கொழும்புக்கு இன்று (02) காலை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கடந்த 2015 ஒக்டோபர் 11 திகதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் சிறையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க ஆணைக்குழு அழைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் நாளை (03) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக இன்று புதன்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.